News Update :
Hot News »
Bagikan kepada teman!

இந்து ஆலயங்களின் வருட வருமானத்தில் இருந்து ஒரு பங்கு கட்டாயம் அந்த பகுதி கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்

Penulis : thagi varan on Saturday, 25 January 2014 | 09:29

Saturday, 25 January 2014

வாழைச்சேனை  கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாடில் வாழைச்சேனை   பிரதேச கல்வி , கலாசார ,சமூக மேம்பாடு தொடர்பாகவும் , எதிர்கால திட்டங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் வாழைச்சேனை இந்து கல்லூரி பிரதான  மண்டபத்தில் 25/01/2014 அன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்  பெற்றது. சென்ற ஆண்டு இறுதி மாதத்தில் இதே போன்ற கலந்துரையாடலின்  மூலம்   எடுக்கபட்ட தீர்மானங்கள்  , கல்வியில் ஓரளவு நல் மாற்றம்   காணபட்டத்தை தொடர்ந்து  இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யபட்டது . பாடசாலை  மற்றும் தனியார் கல்வி நிலையங்களின்  செயல்பாடுகள் அவை தொடர்பான  மாணவர் ஒழுக்கம் , பொருளாதார வசதி குறைந்த மாணவர்களின்  எதிர் கால கல்வி அபிவிருத்தி , போன்ற பல விடயங்கள் பேசபட்டது  அதனை தொடர்ந்து இனிவரும் காலங்களில் பாடசாலைஆசிரியர்கள்  , தனியார் கல்வி நிலையங்கள் இணைந்து  கருத்தரங்குகள்  முன் எடுக்கவும் , உயர்தரம் தெரிவாகும் மாணவர்களுக்கு பாட  தெரிவு தொடர்பாக  விளக்கமளிக்கவும்  , சமூக அபிவிருத்தியில் அதிக பங்கு கல்விக்கு பயன்படுத்துவது  என்றும் , இந்து ஆலயங்களின் வருட வருமானத்தில் இருந்து  குறித்த பங்கு அந்த பகுதி  கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்த  வேண்டும் என பல ஆக்கபூர்வமான   முடிவுகள்  எடுக்கப்பட்டன இக் கலந்துரையாடலில்  கோறளைப்பற்று பிரதேச செயலாளர்  திருமதி கௌரி தினேஷ் , உதவி திட்டமிடல் பணிப்பாளர்  த. பிரபாகரன் , உட்பட அதிபர்கள் , கிராம சேவையாளர்கள்   , தனியார் கல்வி நிலைய பொறுப்பாளர்கள்  ,  சமூக மட்ட அமைப்பு  தலைவர்கள் , ,கிராம அபிருத்தி சங்க தலைவர் ,உறுப்பினர்கள்  என பலர் கலந்து கொண்டனர்comments | | Read More...

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளர் பட்டதாரிப் பயிலுனர்களுடனான சந்திப்பு

Penulis : Admin on Thursday, 23 January 2014 | 01:33

Thursday, 23 January 2014


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக நியமனம் பெற்று வந்திருக்கும் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ர அதிகாரியும் முன்னாள் நாவிதன்வெளி, திருக்கோவில் பிரதேச செயலாளருமான ஆன கோபாலரெட்ணம் அவர்கள் நேற்று (22.01.2014) அன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுடனான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பட்டதாரிப் பயிலுனர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இதுவரை எந்தவிதமான  திணைக்களம், அமைச்சுக்களின்கீழ் உள்வாங்கப்படாதவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன். பட்டதாரிப் பயிலுனர்களின் சம்பள விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
comments | | Read More...

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் பரிசளிப்பு, கொளரவிப்பு நிகழ்வு (வீடியோ இணைப்பு)

Penulis : Admin on Wednesday, 15 January 2014 | 01:15

Wednesday, 15 January 2014

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஏற்பாட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கலாசார மண்டபத்தில் மாபெரும் பரிசளிப்பு, கௌரவிப்பு நிகழ்வு இன்று (15.01.2014) களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபை தலைவர், க.வ. வேல்வேந்தன், அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

இந்த பரிசளிப்பு நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மற்றும் களுதாவளையைச் சேர்ந்த புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் ஆகிய பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் காசோலைகளும் வழங்கப்பட்டன. . களுதாவளை கிராம மட்டத்தில் பொது பணியாற்றிய நான்கு பேர் கௌரவிக்ப்படவுள்ளனர். களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நீண்ட காலம் ஆலய பிரதம குருவாக இருந்த சிவசிஸ்ரீ சு. ப சந்திரசேகர குருக்கள் மற்றும் களுதாவளை மகாவித்தியாலய அதிபராக நீண்ட காலம் சேவையாற்றிய எல்லம் ஜோசப், களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் சுரக்காமத்தி குடி வண்ணக்கராக நீண்ட காலம் கடமையாற்றிய இ. சீனித்தம்பி ஆகியோரும், கொளரவிக்கப்பட்டனர்.

மேலும் களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வரலாற்றை, சைவ சமய பாடப்புத்தகத்தில் எழுதிய அதிபர், இ. கோபாலபிள்ளை அவர்களும், கொரவிக்கப்பட்டார்.


comments | | Read More...

அக்கரைப்பற்று வீதி விபத்தில் இருவர் மரணமடைந்ததுடன் ஒருவர் படுகாயத்துக்குள்ளாகினார்.

(வி.சுகிர்தகுமார்)

 பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சாலைக்கு அருகில் நேற்று (14) மாலை 5.30மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்ததுடன் ஒருவர் படுகாயத்துக்குள்ளாகினார்.

comments | | Read More...

களுதாவளையில் மாபெரும் பரிசளிப்பு, கௌரவிப்பு விழா

Penulis : Admin on Tuesday, 14 January 2014 | 07:54

Tuesday, 14 January 2014


களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஏற்பாட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கலாசார மண்டபத்தில் மாபெரும் பரிசளிப்பு, கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.

 களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபை தலைவர், க.வ. வேல்வேந்தன், அவர்களின் தலைமையில் நாளை (15.01.2014) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார்.  சிறப்பு அதிதியாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், கட்டடங்கள் திணைக்களபிரதம பொறியியலாளர் எம். ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

விசேட அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், பொறியலாளர் எம். மங்களேஸ்வரன், பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனை பொறியியலாளர் ரீ. ராசநாயகம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

இந்த பரிசளிப்பு நிகழ்வில் களுதாவளையைச் சேர்ந்த மாணவர்கள், புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் ஆகிய பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. களுதாவளை கிராம மட்டத்தில் பொது பணியாற்றிய நான்கு பேர் கௌரவிக்ப்படவுள்ளனர். களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நீண்ட காலம் ஆலய பிரதம குருவாக இருந்த சிவசிஸ்ரீ சு. ப சந்திரசேகர குருக்கள் மற்றும் களுதாவளை மகாவித்தியாலய அதிபராக நீண்ட காலம் சேவையாற்றிய எல்லம் ஜோசப், களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் சுரக்காமத்தி குடி வண்ணக்கராக நீண்ட காலம் கடமையாற்றிய இ. சீனித்தம்பி ஆகியோரும், கொளரவிக்கப்படவுள்ளனர். 

 மேலும் களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வரலாற்றை, சைவ சமய பாடப்புத்தகத்தில் எழுதிய அதிபர், இ. கோபாலபிள்ளை அவர்களும், கொரவிக்கப்படவுள்ளார். 
comments | | Read More...

மீனவர்களுக்கு உயர் காப்பு அங்கிகள் வழங்கும் நிகழ்வு


மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் மீனவர்களுக்கான உயிர் காப்பு அங்கிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட கடல்தொழில் நீரியலவளத்திணைக்களத்தினால் வழங்கப்பட்டன.


உயிர்காப்பு அங்கிகள் வழங்கும் நிகழ்வு திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தில் உதவிப்பணிப்பாளர் தொமிங்கு ஜோர்ச் தலைமையில் நடைபெற்றது.

இதில், சிரேஸ்ட கடல்தொழில் பரிசோதகர் ஜே.ஏ.இ.எக்ஸ்.ராஜ்குமார், கடல்தொழில் பரிசோதகர்களான பி.மனோகரன், ரி;.அமிர்தலிங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அத்துடன், இன்றைய நிகழ்வில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றமைக்கான காப்புறுதிப்பணமும் மீனவர் ஒருவருக்கு வழங்கப்பட்டது.

மாவட்டத்திலுள்ள 350 பேருக்கு உயிர் காப்பு அங்கிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்படுகின்றன.     இதன் முதல் கட்ட நிகழ்வே இன்றைய தினம் நடைபெற்றது.

வாவி மற்றும் கடல் மீன்பிடிகளில் ஈடுபடும் மீன்பிடியாளர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 23672 மீன்பிடிக் குடும்பங்களைச் சேர்ந்த 25159 பேர் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இந்த மீன்பிடியாளர்களால் 86372 பேர் நேரடிப்பயனாளர்களாக உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், 1223 வெளியிணை இயந்திரப்படகுகள், 360 ஆழ்கடல் இயந்திரப்படகுகள், 70 ஒருநாள் இயந்திரப்படகுகளும் அடங்கலாக 1693 இயந்திரப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுகின்றன.

அதே நேரம், கடல் தொழிலாளர்களுக்கு உயிர்காப்பு அங்கிகளும், காப்புறுதியும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், 1693 இயந்திரப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இவற்றில் 1223 வெளியிணை இயந்திரப்படகுகள், 360 ஆழ்கடல் இயந்திரப்படகுகள், 70 ஒருநாள் இயந்திரப்படகுகளும், என உள்ளன.
இவற்றில் இருவர் மீன்பிடிகளுக்காக செல்கின்றனர். இவர்களுக்காக உயிர்காப்பு அங்கிகள் கட்டாயமாகும். அதே நேரம் படகுக்கும் பயணிப்பவர்களுக்கும் காப்புறுதியும் கட்டாயமாகும்.

எந்தவிதமான காப்புறுதியும் இல்லாது மீன்பிடியில் ஈடுபடும் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நஸ்ரஈடு வழங்குவதில் பிரச்சினைகள் ஏற்படுவதுடன், நஸ்டஈடு வழங்க முடியாத நிலையும் காணப்படுகிறது. கடந்த காலங்களில் 13 பேர்வரை மீன்பிடியில் ஈடுபட்டவேளை உயிரிழந்துள்ளனர்.

மீனவர்களுக்கான காப்புறுதிகள் மேற்கொள்ளப்படும் போது, 115000 ரூபாய் இழப்பீடு மரணச்சடங்குச் செலவுடன் வழங்கப்படுகிறது. அதே நேரம் மீன்பிடிக்குச் சென்று காணாமல் போகும் மீனவர்களுக்கு அவர்கள் வீடு திரும்பும் வரையில் மாதாந்தம் 5000 ருபாய்களும் வழங்கப்படுகின்றன.

எனவே அனைத்து கடல் மீன்பிடியாளர்களும் தங்களது படகுகளுக்கும், மீன்பிடியாளர்களுக்கும் காப்புறுதிகளைச் செய்து கொள்ள வேண்டும். என்பதுடன் உயிர்காப்பு அங்கிகளையும் பயன்படுத்த வேண்டும்.
எனவே மீனவர்கள் தமது காப்புறுதியை கட்டாயமாக மேற்கொள்ளுதல் வேண்டும் என்றும் உதவிப்பணிப்பாளர் தொமிங்கு ஜோர்ச் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


comments | | Read More...

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் நிகழ்வு – பிரதமர் பங்கேற்பு


தைத்திருநாளை முன்னிட்டு லேக் ஹவுஸின் அனுசரனையுடன் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் ஏற்பாட்டில் மாபெரும் தைப்பொங்கல் நிகழ்வு நடத்தப்பட்டது.


மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாட்டின் பிரதமர் டி.எம்.ஜயரட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இன்று காலை ஆலய முன்றிலில் பொங்கல் நிகழ்வு நடைபெற்றதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் வறிய மக்களுக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.


comments | | Read More...

மகாவலித்திட்டத்தினுள் மட்டு மாவட்ட காணிகளை உள்வாங்குவதை தடுக்க துரைரெட்ணம் வேண்டுகோள்

Penulis : santhru on Friday, 10 January 2014 | 02:09

Friday, 10 January 2014

மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்ட செங்கலடி, கிரான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள மேய்ச்சற் தரைக்காணிகளை மகாவலித் திட்டத்தின் கீழ் வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும் முயற்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பிஎஸ்.எம்.சார்ள்ஸ்க்கு அனுப்பி வைத்துள் ளகடிதத்திலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

மகாவலித் திட்டம் 1969ஆம் ஆண்டு காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஆட்சிக்காலத்தின் போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டது .

குறிப்பாக திருகோணமலை, பொலநறுவை, மலையகம், அம்பாறை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் மாகாவலித்திட்டமானது பகுதி பகுதியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டங்கள் பொலநறுவை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை உள்ளடக்கிய (டீ) பிரிவானது மாதுறு ஓயா திட்டம் என அழைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் விவசாயம் செய்யக் கூடிய கோறளைபற்று வடக்கு (வாகரை), கோறளைபற்று தெற்கு (கிரான); பிரதேசசெயலகப் பிரிவுகளிலுள்ள கிரான் பாலத்திற்கு வடக்கு மற்றும் வடமேற்கு திசையாகவும், ஓட்டமாவடிப் பாலத்திற்கு வடக்கு பக்கமாகவும் பனிச்சங்கேணி, திருகோணமலை பிரதான வீதியிலிருந்து 3கிலோ மீற்றருக்கு மேற்காகவும் உள்ள பகுதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இது வாகரை பிரதேச செயலகப் பிரிவின் கிராமசேவகர் பிரிவுகளான புணாணை கிழக்கு மதுரங்கேணிக்குளம், புச்சாக்கேணி, கட்டுமுறிவுக்குளம், கிரான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வடமுனை, ஊத்துச்சேனை, கல்லிச்சை, புணாணைமேற்கு, பேரில்லாவெளி, குடும்பிபிமலை, முறுத்தானை, பெண்டுகள்சேனை, வாகனேரி, ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளும் ஏற்கனவே இத்திட்டத்தின் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆயினும் இச்செயல்பாடானது அக்காலகட்டத்தில் நிலவிய அசாதாரண சூழ் நிலையைக் காரணம் காட்டித் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது .

எனினும் இப்பகுதிகளுக்கான காணி நிர்வாகவிடயங்கள் அனைத்தும் அந்த பிரதேசசெயலகப்பிரிவால் நிர்வகிக்கப்பட்டவந்தது .இதேவேளை இத்தகைய சூழ் நிலையைக் காரணம் காட்டியே மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட மகோயா, பதியத்தலாவ பகுதிகள் அம்பாறை மாவட்ட நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டு பின்னர் 2010ம்ஆண்டு மகாவலித் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தகைய தந்திரோபாயத்தை கையாண்டே தற்போது மகாவலிதிட்டத்தின் கீழ் செங்கலடிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள ஈரலக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பெரிமாதவணை, மைலத்தமடு,. விளாவடிப்பொத்தானை, நெடியவட்டை ஆகிய பிரதேசங்களில் உள்ள 2800 ஏக்கர் கால்நடைகளுக்குரிய மேய்ச்;சல்தரைக்காணிகளை புதிதாக உள்வாங்குவதற்குரிய முன்முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அறியவருகின்றது .

அதேவேளை இப்பகுதில் அத்துமீறி வெளிமாவட்ட பெரும்பான்மை சமூகத்தவர்கள் காணிகளைக் கைப்பற்றி விவசாயம் செய்துவருவதும் குறிபிடத்தக்கதாகும்.

இதேபோல் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்வாங்கப்பட்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலை (கி.சே.பி) மைலத்தமடு, சிறிய மாதவணை (மலமண்டி) மோழில்வள, வம்மிக்குளவட்டை, பூவட்டை ,தகரப்பொத்தானை போன்ற கிராமங்களில் உள்ள 5000 ஏக்கருக்கு மேற்பட்ட கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைக்காணிகளை சுமார் 250 ற்கு மேற்பட்ட வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் இராணுவத்தின் உதவியுடன் அத்துமீறிக் கைபற்றி விவசாயம் செய்து வருகின்றனர்.

இவ்அத்துமீறல்களை உறுதி செய்யக்கூடியவாறு 20-12-2013 அன்றும் அதன் பின்பும் புத்தபிக்கு ஒருவர் வருகை தந்து தகரப்பொத்தானையில் உள்ள மேய்ச்சல் தரைபகுதியை 50ற்கு மேற்பட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவருக்கு பகிர்ந்தளித்துள்ளமை சான்றாகும். .இது மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகத்திற்குத் தெரியாமல் நடைபெற்றுக் கொண்டுவரும் அத்துமீறல் செயல்பாடாகும். இந்நடவடிக்கைகள் மூலம் எமது மாவட்ட மக்களின் கால்நடை மேய்ச்சல் தரைக்காணிகள் கபளீகரம் செய்யப்படுகிறது. இது சமாதானத்தின் பெயரால் எமது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

எனவே இப்பிரதேசத்தில் அத்துமீறி கைப்பற்றப்பட்ட கால்நடை மேய்ச்சலுக்குரிய காணிகளை மீளப்பெற்று கால்நடைப் பண்ணையாளர்களின் பாவனைக்கு மேய்ச்சற்தரை காணிகளை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

comments | | Read More...

வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவு அமைப்பதற்கான நடவடிக்கை – பிரதியமைச்சர் முரளிதரன்

மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான இடத்தினைப்பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
comments | | Read More...

களுதாவளையின் புதிய ஆரம்பப்பாடசாலை ஆரம்பித்து வைப்பு


மட்டக்களப்பு களுதாவளையில் இன்று புதிய ஆரம்பப்பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பாடசாலை களுதாவளையில் அமையப்பெற்ற 6வது ஆரம்பப்பாடசாலையாகும்.

இப்பாடசாலைக்கு  மட் /களுதாவளை விக்னேஸ்வரா வித்தியாலயம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பாடசாலையினை   பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ந .புள்ளநாயகம் அவர்களால் களுதாவளை -01 ல் சிறப்பான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.


comments | | Read More...

மட்டக்களப்பு திருக்கொன்றை முன்மாரி அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு புலம்பெயர் உறவுகளினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Penulis : Admin on Tuesday, 7 January 2014 | 02:47

Tuesday, 7 January 2014

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் புலம்பெயர் உறவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கல்வித்துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.

இவ் வேலைத்திட்டத்தின்கீழ் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்/திருக்கொன்றை முன்மாரி அ.த.க பாடசாலை விவேகானந்தபுரம் மாணவர்களுக்கு கற்றறல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (07.01.2014) திருக்கொன்றை முன்மாரி அ.த.க பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், பட்டிருப்பு கல்வி வலய கணக்காளர் உட்பட கல்வித்திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.


comments | | Read More...

Add 1

Add 2

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. Battinews . All Rights Reserved.
Design Template by Lanka4news | Support by மட்டு செய்திகள் | Powered by Batti Media Network.